காலியில் கடலுக்குள் மூழ்கியிருந்த நிலையில் பாரிய சிலையொன்று மீட்பு!!

காலியில் கடலுக்குள் மூழ்கியிருந்த நிலையில் பாரிய சிலையொன்று சுழியோடிகளால் மீட்கப்பட்டுள்ளது. காலி கோட்டை அருகே கடலுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட இச்சிலையின் எடை 40 கிலோ கிராம் அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டை அருகே உள்ள கடற்கரையில் இருந்து 150 – 200 அடி தொலைவில் கடல் நீரில் 5 -10 ஆழத்தில் இந்தச் சிலை புதையுண்டு கிடந்துள்ளது.அதனைக் கண்ணுற்று வாலிபர் ஒருவர் தன் நண்பர் ஒருவருடன் இணைந்து சிலையை கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.

சிலைமீட்பு விவகாரம் குறித்து அதனை மீட்டவர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு பல தடவைகள் அறிவித்தும் பொலிஸார் அவ்விடத்துக்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது.

அதன் பின்னர் கடலில் இருந்து மீட்கப்பட்ட சிலை காலி கோட்டைக்குள் இருக்கும் பௌத்த விகாரையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதனை மீட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]