முகப்பு News Local News காலிமுகத் திடலில் மெகி நூடுல்ஸ் தயாரிப்பு வாகனத்தில் தீ விபத்து

காலிமுகத் திடலில் மெகி நூடுல்ஸ் தயாரிப்பு வாகனத்தில் தீ விபத்து

கொழும்பு – காலிமுகத் திடலில் மெகி நூடுல்ஸ் தயாரிப்பு வாகனம் தீடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளதோடு, எரிவாயு கசிவு காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும், குறித்த தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர்.

இத் தீ விபத்தினால், மெகி நூடுல்ஸ் தயாரிப்பு வாகனம் முற்றிலும் தீக்கரையாகியுள்ளதோடு, சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இதனால் மெகி நூடுல்ஸ் தயாரிப்பு வாகனத்தில் பணிப்புரிந்தவர்கள் மற்றும் பொது மக்கள் யாருக்கும் காயம் மற்றும் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலும் தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில், சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் அதிகளவில் கூடும் ஒரு வராலாற்று இடமாக கொழும்பு – காலிமுகத் திடல் காணப்படுகின்றது.

இங்கு வருபவர்கள் துரித உணவுகளை அதிகளவு உட்கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மெகி நூடுல்ஸ் தயாரிப்பு வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com