காலா பட டீசர் பற்றி தனுஷ் வெளியிட்ட தகவல்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படத்தின் டீசர் முதல் மார்ச் முதல் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் காலா. படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார் மற்றும் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தனிஷின் இந்த அறிவிப்பால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

படம் பற்றி டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் தெரிவித்ததாவது, ”நீங்கள் எல்லாம் காத்துக் கொண்டிருந்த செய்தி…காலா திரைப்படத்தின் டீசர் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகிறது. சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை காண காத்திருங்கள். இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க” என்று பதிவிட்டுள்ளார்.

காலா

’காலா’ திரைப்படமானது இந்தவருடம் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.