காலா படநடிகையா இது? அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ஈஸ்வரி ராவை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்தது, ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்த ஹீமா குரேஷி தான்.

இந்தி நடிகையான இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் அஜித் நடித்த பில்லா 2 படத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் கூட சென்றிருந்தாராம். ஆனால், அப்போது அந்த படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அதன் பிறகு வேற எந்த தமிழ் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை.

30 வயதாகும் நடிகை ஹீமா குரேஷி, இந்தியில் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கெங்ஸ்டர் ஆப் வசைபூர்’ என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் நடித்ததர்காக சிறந்த துணை நடிகை என்ற ஸி அவார்ட் விருத்தியும் பெற்றார். இந்தி சினிமாவில் இருந்தால் கவர்ச்சிக்கு கற்றுத்தர வேண்டுமா என்ன.

சமீபத்தில் மாக்ஸிம் பத்திரிக்கையின் அட்டை படத்திற்காக கவர்ச்சியான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் ஹீமா குரேஷி. ஏற்கனவே இவர் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்ட போது இவரது உடலை பலரும் கிண்டல் செய்தனர். இதனால் அந்த புகைப்படத்தில் ‘என் உடல் என் உரிமை ‘ என்று வசனத்தை கையில் ஏந்தியபடி போஸ் கொடுத்து தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதில் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]