காலா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா??

பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் காலா நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியானது. இந்த திரைப்படத்துக்கு பல இடங்களில் எதிர்ப்பு வந்தாலும் பெரும்பாலான திரையரங்கில் ஹவுஸ்புல் போர்டு வைக்கப்பட்டிருந்தது.

இதேபோல் பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் நடிகர் விஜய்யின் மெர்சல் படம் வெளியானது. இந்த படம் முதல் நாளில் சென்னை பகுதியில் 1.52 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

நேற்று முன்தினம் வெளியாகிய காலா பல தரப்பு விமர்சனங்கள் பெற்றாலும். அனைத்து தரப்பினரையும் படம் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். மேலும் இந்த படத்தில் வரும் இடைவெளி காட்சியும், கிளைமாக்ஸ்-ம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. காலாவில் ரஜினியின் நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கைதட்டல்களை பெறும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் மட்டும் சென்னை பகுதியில் 1.76 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]