காலா கார யாரு வச்சிருக்கா?

சூப்பர் ஸ்டாரின் அரசியல் அறிமுகத்தை தொடர்ந்து மிக பரபரப்பாக இருப்பது பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்துவரும் காலா படம். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

முதல் நாள் ஷூட்டிங் போட்டோக்களும் உடனே வெளிவந்தன. ரஜினியின் கெட்டப் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்நிலையில் காலா போஸ்டரில் ரஜினி ஜீப் காரின் மீது கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தது வியப்பாக இருந்தது.

தற்போது இந்த கார் பிரபல நிறுவனத்தின் தார் என்னும் மாடலை சேர்ந்ததாகவும், குறிப்பாக ரஜினி பயன்படுத்திய அந்த கார் பற்றிய தகவல் கிடைத்தால் உடனே தனக்கு தெரியப்படுத்துங்கள் என பிரபல கார் நிறுவனத்தின் அதிகாரி ஆனந்த் கூறியுள்ளார்.

இந்த காரை நாங்கள் வாங்கி எங்கள் நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

பட வியாபாரத்திற்கு முன்பே காலா கார் விற்பனையானால் ஆட்சேபனை இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.