காலா கதை, ரஜினி – ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் படம் மும்பையை பின்னணியாக கொண்ட படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது நெல்லையிருந்து சென்றவரின் கதை என்று கூறப்படுகிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட கதை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நாயகன் படம் வெளியாகிவிட்டது. ஹாஜி மஸ்தான் பற்றி கதை என்று முதலில் செய்தி பரவியது, ஆனால் அந்த கதை இல்லை என்று மறுத்துவிட்டனர்.
தற்போது ரஞ்சித், நெல்லையிருந்து சென்ற குடும்பத்தின் கதை என்று கூறியுள்ளார். ‘கூடு வாலா சேட்’ என்று மும்பையில் அழைக்கப்பட்டு வந்தவர் அவர். மும்பையில் தமிழ் சங்கம் வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்தவர். திரவியம் நாடார், இவர் சிறுவயதிலே மும்பை சென்று அங்கு மராட்டியர்களுக்கு எதிராக போராடியவர்.
இதனால் காலா, திரவியம் நாடார் என்பவரை பற்றிய கதையாக இருக்குமோ என்று பேசப்படுகிறது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]