சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் காபாலிக்கு பிறகு பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தான் காலா.

பாஇரஞ்சித் திரைப்படத்தை இயக்க மருமகன் தனுஸ் படத்தை தயாரிக்கின்றார்.

காலா தொடர்பில் பல வதந்திகள் பரவி வரும் நிலையில், இது தான் காலாவின் திரைப்படத்தின் கதை என தற்போது ஒரு கதை உலாவி வருகின்றது.

அதாவது, கதை அவ்வாறு ஆரம்பிக்கின்றது…

மும்பை மாநகரம். இங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான தாராவி என்ற ஊர் ஒன்று உள்ளது. இந்த ஊரில் இருந்து தான் காலா படத்தின் கதை பிறக்கிறது.

மிகப்பெரும் செல்வந்தராய் விளங்கிய ஒரு மனிதர் அவர் தான் சூப்பர் ஸ்டார்.

அவர் ஏழைகளின் விடிவெள்ளியாக காட்சித் தந்தார். மும்பையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாய் வலம் வந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு என்றால் அது நம்ம சூப்பர் ஸ்டார்.

தாராவி என்ற ஊரில் நம்ம சூப்பர் ஸ்டார் கால் படாத இடமே இல்லை என்று கூறலாம். அங்குள்ள எல்லோருக்கும் கடவுளாய் தெரிந்தார். ஒரு நாள் இவர் சென்ற வாகனம் தாராவிக்கு அருகேயுள்ள மாகீம் பகுதிக்குள் சென்றது.

அங்கிருந்த மும்பை வாசிகள் இவரை தாக்கினார்கள். இவன் தமிழகத்தில் இருந்து வந்து மிகப்பெரிய தலைவனாய் உருவெடுத்திருக்கிறான் என நினைத்து அடித்துவிட்டனர். பின்பு அவர்களிடம் பேசிய நம்ம சூப்பர் ஸ்டார் ‘கண்ணா இந்தியனாக பிறந்தேன் ஒரு நாளும் நான் தமிழ்நாட்டுக்காரன் என்று என்னை பிரிச்சிப் பார்த்ததில்லை.

இப்போ சொல்றேன் நீயும் இந்தியன், நானும் இந்தியன் இந்த மும்பை நகரத்தையே என்னோட கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவேன். நீ பாக்கப்போர கண்ணா என்னோட இன்னொரு முகத்தை’ அப்படினு நம்ம சூப்பர் ஸ்டார் பேசும் பேச்சோட இடைவேளை தொடங்குது.

அதுக்குப் பிறகு மீதி பாதியில் சூப்பர் ஸ்டார் மும்பையை கைப்பற்றுவதற்கான வேலையைப் பார்க்கின்றார். தமிழ் மக்களோட துன்பங்களையும், துயரங்களையும் களைவதற்கு மிகுந்த ஈடுபாடு தருகிறார்.

காலா

இவரின் கம்பீர குரலும், வீர நடையும், தனி ஸ்டைலும் ரஜினியின் இளமைக் காலத்தை மீண்டும் காலாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கொண்டுவந்துள்ளார்.

இந்தப் படத்தில் ரஜினி ஹாஜிமஸ்தான் எனும் வேடத்தில் நடிக்கிறார்.

மும்பை தாராவி பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் தலைவனாக ரஜினியைத் திரையில் காட்டுவதற்கு தனி விருப்பமாம் பா. ரஞ்சித்க்கு என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]