காலாவுக்கே பொலிஸ் பாதுகாப்பா?

காலாவுக்கே

காலாவுக்கே பொலிஸ் பாதுகாப்பா?

இம்மாதம் 7-ந்தேதி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தப்படத்தை ரஜினிகாந்தின் மருமகனான தனுஷ் தயாரிக்கிறார். படமானது ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரவிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு தீராத பிரச்சினையான காவிரி நீர் பிரச்சனையின் போது, ரஜினிகாந்த் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியிருந்தார். அப்போது அவர் நடிப்பில் உருவாகும் படங்களை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. காலா திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்து.

காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்றையதினம் வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும், படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]