காலாவிற்கே இந்த நிலைனா 2.0 அவ்வளவுதான்போல- ரஜினியின் மைன்வாய்ஸ்

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தை கர்நாடக மாநில திரைப்பட வர்த்தக சபை இந்த படத்தை திரையிட முடியாது என்று கூறியுள்ளது. காவிரி பிரச்சனையில் ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதால், கன்னட அமைப்புகள் நடிகர் ரஜினி மீது கோபத்தில் உள்ளது. இதனால் காலா திரையிடப்படும் இடங்களில் பாதுகாப்பு பிரச்சனை வர வாய்ப்பு இருப்பதால் படத்திற்கு தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்ப்புகளை மீறி கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட இருக்கும் ”சி” நிறுவனம் என்ற பிரபல சினிமா நிறுவனம் காலாவை 130 தியேட்டர்களில் வெளியிட நிலையில், ஒரே ஒரு திரையரங்கத்தில் மட்டும் திரையிடப்பட்டது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அந்த ஒரு தியேட்டருக்கு படையெடுத்தனர். ஆனால் அதற்குள் தகவல் அறிந்த கன்னட அமைப்பினர் திரையரங்கில் திரண்டதால் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் அவர்கள் திரையரங்கில் இருந்த ரஜினி ரசிகர்களை திரையரங்கின் உள் புகுந்து துரத்தியடித்தனர்.

இதனால் ரஜினி ரசிகர்கள், கன்னட அமைப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு அந்த இடமே போர்களமானது. காலா படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் மேலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் இன்று கர்நாடக மாநிலத்தை தவிர இந்திய முழுவது காலா திரைப்படம் வெளியிடப்பட்டது. இதில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு காலா படத்திற்கு வரவேற்பு தமிழக முழுவதும் பெரும் அளவு குறைந்துள்ளது. முக்கியமாக தலைநகரான சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு வரவேற்பு இல்லை.

இதே போல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் காலா படம் திரையிட்ட திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன. காரைக்காலில் ரசிகர்கள் முதல் காட்சிக்கு பிறகு முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டது, அதேபோல் சிதம்பரம், விருதுநகர், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் திரைரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த நிலை தொடர்ந்தாள் நடிகர் ரஜினிக்கு வரும் காலங்களில் பெரும் பாதிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]