காலாவாக மாறிய நம்ம தல தோனி – வைரல் வீடியோ உள்ளே…

ரஜினியின் காலா வசனத்தை தல தோனி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. முழுக்க மும்பையைச் சுற்றிலும் நடக்கும் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில், இப்படத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு, மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த டீசரில் ரஜினிகாந்த் பேசும் க்யா ரே செட்டிங்கா என்ற வசனத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை காலாவின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனம் தங்களது டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

காலாவின் வில்லன் நானா படேகர் பேசிய வசனமான காலா என்ன பேருய்யா என்ற வசனத்தை ஹர்பஜன் சிங்கும், காலான்னா கருப்பு என்ற வசனத்தை முரளி விஜய்யும், காலன் கரிகாலன் என்ற வசனத்தை பிராவோவும் பேசியுள்ளனர். இதையடுத்து, ரஜினியின் வசனமான க்யா ரே செட்டிங்கா என்பதனை தல தோனியும் பேசியுள்ளார். சிஎஸ்கே வெர்ஷனில் காலா டீசர் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]