காலா ட்ரீசரும் ரஜினி சொல்லவரும் அரசியலும்

அண்மையில் வெளிவந்த காலா திரைப்படத்தின் ட்ரீசர் பலரது எதிர்பார்ப்புகளையும், எதிர்ப்பையும் கிளப்பியிருக்கிறது.அதுல என்ன தான் அப்பிடி இருக்கு?? வாங்க பார்ப்போம்.முதலில் காலா திரைப்பட டீசரில் இயக்குனர் பா.ரஞ்சித் மூன்று பிரதான நிறங்களை பயன்படுத்ததியுள்ளார் அவை,

கருப்பு – உழைப்பாளிகளின்  நிறம்

சிவப்பு  – வறுமையின் நிறம்

வெண்மை – ஆட்சி அதிகாரத்தின் நிறம்

டீசர் ஆரம்பிக்கும் போது கருமையான திரை,  பின்னணியில் “போராடுவோம், போராடுவோம்!“எனமக்கள் எழுப்பும் கோக்ஷம் ஒலிக்க அதே நேரத்தில் சிவப்பு நிறத்தில் எழுத்து தோன்றுகிறது.  அடுத்த காட்சியில் வெள்ளை SOFA வில் பளீர் வெள்ளை உடையில், நானாபட்டேகரின்  “என் பெயரிது, காலா ? என்ற கேள்வியுடன் டீசர் துவங்குகிறது.

தொடர்ந்து கரிய உடையில் காலா மற்றும் உழைப்பாளிகள், காலா குடும்பத்தினரோடு உரையாடி மகிழும் இஸ்லாமியர்கள், பறை அடிப்பவர்கள், சலவை தொழிலாளர்கள், ஹுமாகுரேஷி,  அஞ்சலிபட்டேல், ( இவர் பிரசண்ணவிதானகே இயக்கிய சிங்கள திரைப்படத்தில் நடித்தவர்) சமுத்ரகனி  , ஈஸ்வரிராவ், என  ஒரு பட்டாளத்தின் குடிசை வாழ்க்கையின் தோற்றம்.மறுபுறம் வெள்ளை SOFA வில் கருப்பு உடையில் அமர்ந்திருக்கும் ரஜினி, “ ஒத்தைல வந்திருக்கேன் மொத்தமாவாங்கலே “எனும் நெல்லை மொழி வழக்கில் அரசியல் வசனம், தாராவியின் குடிசைப்பகுதி, தீயில் சண்டை காட்சி ,மழையில் சண்டைகாட்சி என  – கபாலி டீசரை விட ஓரு படி மேலே நிற்கிறது காலாடீசர்.

டீசரோடு வெளியகியிருக்கும் PROMO- படங்களில், காலாவின் குடும்பப்படம், காலா தன் சகாக்களோடு சென்று அரசு அதிகாரிக்கு எச்சரிக்கை விடுவது போன்ற ஒரு படம், வெள்ளை  SOFA வில் காலா அமர்ந்திருப்பது போல ஒரு படம் (அதில் ரஜினியின் வலது கையில் சரீனா என்ற பெயர் பச்சைகுத்தப்பட்டிருப்பதோடு ஹுமாகுரேஷியின் கதாபாத்திரத்தின் பெயரும் சரீனா என்பது குறிப்பிடத்தக்கது) தன் அரசியல் பின்னணியை கலந்து விட்டு இருக்கிறார்.

அடுத்த படத்தில் ரஜினியின் பிரத்தியேக அறை, முக்கியமாக அங்கே மேசை மீது இருக்கும் புத்தகங்களில் ஒன்று“ கே.டேனியல்படைப்புகள் “ என்ற புத்தகம். கே.டேனியல் இலங்கையில் ஆனைக்கோட்டையில் 1929ம் ஆண்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்.இவர் 1972ம் ஆண்டில்  எழுதிய முதல் நாவல்  “ பஞ்சமர்”  ஆகும்,இதில் உயர் சாதியினரை எதிர்த்துப்போராடும் வகையில் கதைக்களம் அமைத்திருந்தார்.இதுவும் ரஜினியின் அரசியலா??

பொதுவாக பா.ரஞ்சித் ஒவ்வொரு படத்தில் குறியீடுகளை வைத்து கதை சொல்லுவது வழக்கம், கபாலி படத்தின் அறிமுக காட்சியில் “MY FATHER BALAIAH” என்ற புத்தகத்தை ரஜினி படித்துக்கொண்டிருப்பார்.

தெலுங்கானா மாநிலத்தின் கரீம் நகரைச்சேர்ந்த “சத்தியநாராயணா” தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தை விளக்கும் வகையில், தனது தந்தை பாலையா சந்தித்த சமூக போராட்டங்கள், அதிலிருந்து மீண்டு தனது குடும்பம் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார், இந்த முறை காலாவில் “ கே.டேனியல் படைப்புகள் “  இடம் பெற்று இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததை  தொடர்ந்து, தனிக்கட்சி அமைந்து தனி சின்னத்தில் போட்டியிடுவேன் என்ற அறிவிப்பையும் விடுத்துள்ளார். இத்தருணத்தில் ரஜினியின் அரசியல் கட்சிக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும் சேகரிக்கும் முயற்சியில் காலா திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.பா.ரஞ்சித் தனது சமூகத்தினை படங்களில் வெளிச்சம் காட்ட முனைக்கிறாரா??

பொதுவாகவே தமிழக அரசியல் மேடைகளில், வை.கோ,திருமாவளவன், டி.ராஜேந்திரன், என் அண்ணன் சீமான் உட்பட தங்கள் அரசியல் பிரசாரங்களில் ஈழத் தமிழர்களை துணைக்கு அழைத்துக்கொள்வது வாடிக்கையானதுதான், அதேபாணியில், நானும் ஈழத்தமிழரில் அக்கரை உள்ளவன்தான் என கூறமுற்படுகிறார் ரஜினிகாந்த்  –  இருக்கட்டும்…

தமிழக மண்ணிலே அகதி அந்தஸ்துடன் மண்டபம் முகாமில் சீரழிந்துகொண்டிருக்கும் எங்கள்  உறவுகளுக்காக என்ன செய்தீர்கள்??..

ஐயா!  உங்கள் அரசியல் போதைக்கு எங்கள் உறவுகள்தான் ஊறுகாயா??..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]