முகப்பு News Local News காலவரையறையின்றி மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகம்

காலவரையறையின்றி மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகம்

ரஜரட்ட பல்கலைக்கழகம் காலவரையறை இன்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை மாணவர்களுக்கான உரிய நீரை வழங்க முடியாமை காரணமாகவே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பல்கலை மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்ட காரணத்தினால் கடந்த 10 ஆம் திகதி மூடப்பட்டு பின்னர் 27 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இருப்பினும் தற்போது அம்மாணவர்களுக்கான குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய முடியாதுள்ளமையால், காலவரையின்றி மூடுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அனுராதபுர மாவட்டத்தில் நிலவிவரும் வறட்சி காரணமாக அப்பகுதியில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com