காலநிலை எச்சரிக்கை தரப்படுத்தலில் 4ஆவது இடத்தில் இலங்கை

உலக காலநிலை எச்சரிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவே இலங்கையில் 96 சதவீத அனர்த்தங்கள் ஏற்படுவதாக யுனிசெப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுவரும் மண்சரிவு, வெள்ளம், கடும் காற்று மற்றும் வரட்சி என்பன இந்த காலநிலை மாற்றத்தின் விளைவாகும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களுக்கு உதவும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம், உலக உணவுத் திட்டம், மற்றும் யுனிசெப் அமைப்பு என்பன இணைந்து இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளன.

இதன்படி இலங்கைக்கு ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவியாக வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் பிரகாரம், இரத்தினபுரி, களுத்துறை,காலி, மாத்தறை, குருணாகல், புத்தளம், அநுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]