காலநிலையை பாதிக்கும் வகையில் அலை வடிவான வளிமண்டல இடையூறு

நாட்டின் காலநிலையை பாதிக்கும் வகையில் அலை வடிவான வளிமண்டல இடையூறு காணப்படுவதனால் மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை மற்றும் கொந்தளிப்புடன் கூடிய காலநிலை கடற்பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் தொடந்தும் எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை காணப்படும் என்றும் அதிகளவான மழை கிட்டத்தட்ட 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் பதிவாகக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

sea wave

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றறுக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் கடும் காற்று சுமார் 40 – 50 கிலோமீற்றர் வேகத்திற்கு எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றுடன் கூடிய மழை மற்றும் இடிமின்னலுடன் கூடிய மழை காணப்படுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.