காலநிலையில் மாற்றம்; அவதானமாக இருக்கவும்

கடும் காற்று

நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் கிழக்கு, ஊவா மாகாணங்களில் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை வேளைகளில் இடையிடையே மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தாழமுக்கம் காரணமாக கடல் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் அதன்காரணமாக மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]