காற்றுடனான காலநிலை தொடரும்: காலநிலை அவதான நிலையம் அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை யை தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுடன் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு காலநிலை அவதான நிலையம், வடமேல் மாகாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்புய்யதாக கூறியுள்ளது.

இதேவேளை நாட்டின் ஊடாக நிலவும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தாக்கம் செலுத்தக்கூடுவதுடன், வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]