காற்றால் மூச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் – வைரமுத்துவின் துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன்!

இந்தியா தமிழகத்தின் பல மாவட்டங்களை கஜா புயல் சூறையாடியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் அவர்களுக்கு உதவுவதோடு, எல்லோரும் உதவ முன் வரவேண்டும் என கூறி வருகிறார்கள்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத் துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு
விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத்
துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.

தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்று
தாமதிக்கப்படும் நிதியும்
மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும்.

காற்றால் மூச்சுப்போன
குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.“

— வைரமுத்து

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]