கார்த்தி சாயெஷா ஜோடியின் பூஜை

பசங்க திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ்.

Sayesha-Saigal

அவர் இயக்குனராக மட்டுமன்றி, திரைக்கதை வசனம் எழுதுதல் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்டவர்.

பாண்டிராஜ் இயக்கத்தில்,இறுதியாக வெளிவந்த திரைப்படம் சிம்பு, நயன்தாரா நடிப்பில் உருவான “இது நம்ம ஆளு”.

Sayesha-SaigalSayesha-Saigal

பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கவுள்ளதுடன், கார்த்தி, பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தை தயாரிக்கப்போவது சூர்யாவின் “2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்” ஆகும்.

Sayesha-Saigal

மேலும், இந்தப் படத்தில் கார்த்தியின் ஜோடியாக, “வனமகன்” படத்தில் நடித்த சாயெஷா சைகல் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்தப் திரைப்படத்தின் பூஜையில் சூர்யா, சிவகுமார், சத்யராஜ், பொன்வண்ணன், ஶ்ரீமன், சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

Sayesha-Saigal

ஏற்கனவே சாயெஷா சைகல் கார்த்தியுடன் “கறுப்பு ராஜா வெள்ளை ராஜா” படத்தில் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அந்த திரைப்படம் திடீர் என இடைநிறுத்தப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]