கார்த்திக் நடிப்பது சூர்யாவுக்கு சொந்தமான கதையிலா?

கடல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாரிசு நடிகர் கெளதம் கார்த்திக்.

கார்த்திக்

இவர் நடித்த படங்கள் வெற்றி பெறாமல் இருந்த நிலையில், ஹரஹர மஹாதேவகி திரைப்படம் எதிர்பார்த்ததை விட வெற்றிப்பெற்றது.

இதனை தொடர்ந்து கெளதம் கார்த்திக் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கௌதமிற்கு

இந்த நிலையில் கெளதம் கார்த்திக் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு தேவராட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன், மார்ச் மாதம் முதல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கார்த்திக்

தேவராட்டம் திரைப்படத்தின் கதையானது முதலில் சூர்யாவுக்கே கூறப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சாதி தொடர்பான விடயங்கள் இருப்பதால் சூர்யா நடிக்க மறுத்துள்ள நிலையில், கெளதம் கார்த்திக் கதையை கேட்டவுடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]