காரைநகர் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பெற்றியுள்ளது!!

ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் காரைநகர் பிரதேச சபையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பெற்றியுள்ளது

காரைநகர் பிரதேச சபைக்கான தவிசளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது

பதினொரு ஆசனங்களைக்கொண்ட யாழ் காரைநகர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களையும் ஈ.பி.டி.பி இரண்டு ஆசனங்களையும் சுயேட்சைக் குழு மூன்று ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கொண்டுள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும் சுயேற்சைக்குழு சார்பிலும் பிரேரிக்கப்பட்ட இருவருக்கிடையில் தவிசாளருக்கான போட்டி இடம்பெற்றது

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பிரேரிக்கப்பட்ட விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் ஏழு வாக்குகளை பெற்று தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் சுயேற்சைக்குழு சார்பில் பிரேரிக்கப்பட்ட உறுப்பினர் மூன்று வாக்குகளையும் பெற்றனர்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை

அதைதொடர்ந்து உப தவிசாளருக்கான வாக்கெடுப்பும் இடம்பெற்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் பாலச்சந்திரன் உப தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]