காரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி?

காரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி?

அசைவ சாப்பாடுகளை காரசாரமாக சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அந்தவகையில், இன்று காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மீன் – 500 கிராம்
மிளகுத்தூள் – 1 கரண்டி
உப்பு – தேவையான அளவு
ஏலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

*மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும்.

*மீனில் எலுமிச்சம் சாற்றை ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிசறி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

*நொன்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் போட்டு காய்ந்ததும் தனித்தனியாக மீனை அடுக்கவும்.

*பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான காரமான மிளகு மீன் வறுவல் தயார்!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]