முகப்பு Food காரசாரமான வெண்டைக்காய் சிப்ஸ் எப்படி செய்யலாம்?

காரசாரமான வெண்டைக்காய் சிப்ஸ் எப்படி செய்யலாம்?

காரசாரமான வெண்டைக்காய் சிப்ஸ் எப்படி செய்யலாம்? என்று இன்று பார்க்கலாம். வெண்டைக்காய் சாப்பிட பிடிக்காதவர்கள் மாலையில் தேனீருடன் வெண்டைக்காயை ஸ்நெக்காக சாப்பிடமுடியும்.

தேவையான பொருட்கள்

பிஞ்சு வெண்டைக்காய் – 20,
கரம்மசாலா தூள் – கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,
அரிசி மாவு – 1 டீஸ்பூன்,
சோள மாவு (கார்ன்ஃப்ளவர்) – கால் டீஸ்பூன்,
கடலை மாவு – 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை
வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் நன்றாக துடைத்து விட்டு, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது.

நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணை காய்ந்ததும், வெண்டைக்காய்களை அதில் சிறிது, சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் அசத்தும் மாலை நேர வெண்டைக்காய் சிப்ஸ் தயார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com