காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகும் ரெய்னா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11வது ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் 5 வது லீக் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், சென்னை அணி கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சாதனைப் படைத்தது.

இந்நிலையில், சென்னை அணி பேட்டிங் செய்யும்போது, சென்னை அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது. இதனால், அவர் பெரிதும் அவதிக்கு உள்ளானார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]