மனைவியின் மரணத்தை அடுத்து கான்ஸ்டபிள் தற்கொலை

கொகருல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இன்று இரவு இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர்கர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தனது கடமைகளுக்காக வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ துப்பாக்கியை பயன்படுத்தி, தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

48 வயதுடைய கான்ஸ்டபிள் கொகருல்ல பொலிஸ் குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது மனைவி உயிரிழந்த விடயத்தை கேள்விபட்டதை அடுத்து, குறித்த கான்ஸ்டபிள் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]