காந்தியின் 86 ஆண்டுகள் பழமையான அரிய பென்சில் ஓவியம் ஏலம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி, 1931-ம் ஆண்டில் பிரிட்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது, ஜான் ஹெண்ட்ரி என்ற ஓவிய கலைஞர் பென்சிலில் காந்தியின் உருவத்தை ஓவியமாக வரைந்துள்ளார்.

இந்த ஓவியமானது தற்போது, அங்குள்ள சோத்பைஸ் என்ற நிறுவனத்தின் மூலம் வரும் 11-ம் தேதி ஏலத்திற்கு வருகிறது. இந்திய மதிப்பில் 6.72 லட்சம் ரூபாயிலிருந்து, 10 லட்சம் ரூபாய் வரை ஏலம் எடுக்கப்படலாம் என்று கணித்துள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

காந்தியின்

இந்த ஓவியத்துடன் சேர்த்து காந்தி, தனது கையால் சரத் சந்திரா போசுக்கு 1940-ம் ஆண்டில் எழுதப்பட்ட கடிதங்களும் ஏலம் விடப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளுக்கு நேர்மாறான கருத்துக்களை கொண்டிருந்த காந்தி, போஸ் குறித்து தனது கருத்துக்களை இந்த கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

காந்தியின்

ஓவியத்தை விட இந்த கடிதங்கள் அதிகமான விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்ப்பதாகவும், அனைத்து கடிதங்களும் சேர்த்து 27 லட்சம் ரூபாய் வரை விலை போகலாம் என கணித்துள்ளதாக ஏல நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]