முகப்பு News Local News காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி அதிகரிப்பு

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி அதிகரிப்பு

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி அதிகரிப்பு

மட்டக்களப்பு – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்திக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து அதனை அதிகரிப்பது சம்பந்தமாக பொது நிர்வாக அமைச்சு, தேசிய சம்பளங்கள் பதவியணிகள் ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களம் என்பவற்றிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காத்தான்குடி தள வைத்தியசாலையில் பல புதிய வெற்றிடங்கள் உருவாக்கப்பட்டு மேலதிக ஊழியர்கள் நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வைத்திய ஆலோசகர்கள் 5, வைத்திய நிபுனர்கள் 32, தாதிமார்கள் 50 மற்றும் சிற்றூளியர்கள் 45 என மொத்தம் 196 ஊழியர்களை கொண்டதாக வைத்தியசாலையின் ஆளணி அதிகரிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,

காத்தான்குடி தள வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது விடயம் சம்பந்தமாக நான் தொடர்ச்சியாக நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்திற்கு விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com