காத்தான்குடியில் வேட்பாளரின் வீட்டின் மீது பெற்ரோல் குண்டுத் தாக்குதல்

காத்தான்குடி

‘காத்தான்குடி’யில் வேட்பாளரின் வீட்டின் மீது பெற்ரோல் குண்டுத் தாக்குதல்

மட்டக்களப்பு -காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள காத்தான்குடிநகர சபைக்காக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுப்பட்டியலில் உள்ள வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை 06.02.2018 பெற்ரோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள புதியகாத்தான்குடி 3, தக்வா நகர் வட்டார வேட்பாளர் அப்துல் மஜீத் முஹம்மது பர்ஸாத் (வயது 34) என்பவரது வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வீட்டிலிருந்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையாயினும் வீட்டுக்கு சிறிது சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றம் நடந்த இடத்தில் பொலிஸ் மற்றும் பொலிஸ் தடவியல் பிரிவினரும் செவ்வாய்க்கிழமை காலை ஸ்தலத்திற்கு விரைந்து தடயவியல் விவரங்களைச் சேகரித்து விசாரணைகளில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி காத்தான்குடி காத்தான்குடி காத்தான்குடி காத்தான்குடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]