காத்தான்குடியில் காணாமல் போன வர்த்தகர் சடலமாக மீட்பு!

காத்தான்குடியில் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த வர்த்தகர் ஒருவர் இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு- காத்தான்குடி நகரில் வர்த்தக பணியில் ஈடுபட்டு வந்த குறித்த வர்த்தகரை காணவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டுவந்தனர்.

உடலமாக மீட்கப்பட்டவர் 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]