காதல் விவகாரம்- பெற்றோருடன் சேர்ந்து மகள் எடுத்த முடிவால் மூவரும் பலி

ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேந்தவர் துங்கா வெங்ய்யா (45). இவர் மனைவி ரஜானி (39). இத்தம்பதிக்கு கிருஷ்ண வேணி (19) என்ற மகளும், சாய் கோபினாத் என்ற மகனும் உள்ளனர்.

கிருஷ்ணவேணிக்கு அவர் பெற்றோர் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில் தான் வேறு நபரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்யபோவதாகவும் அவர் கூறியுள்ளனர்.

ஆனால் குடும்ப கெளரவம் கருதி அதை ஏற்காத பெற்றோர் திருமணத்துக்கு கிருஷ்ணவேணி சம்மதிக்கவில்லை எனில் தாங்கள் தற்கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து மகளுடன் வெங்கய்யாவும், ரஜானியும் புகையிரதத்தில் பயணம் செய்த நிலையில் நடைமேடையில் இறங்கிய பின்னர் திடீரென புகையிரதம் முன்பு வெங்கய்யாவும், ரஜானியும் குதித்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணியும் புகையிரதம் முன்னால் குதித்த நிலையில் மூவரும் உயிரிழந்தார்கள்.

இதனையடுத்து பொலிஸார் மூவரின் சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கய்யா குடும்பத்தில் தற்போது உயிருடன் இருக்கும் சாய் கூறுகையில், நான் பெற்றோரை வெளியில் போகவேண்டாம் என கூறினேன், அவர்கள் தவறான முடிவு எடுக்க மாட்டோம் என என்னிடம் கூறினார்கள்.

ஆனால் மனதை மாற்றி கொண்டு இவ்வாறு செய்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]