முகப்பு News India காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு பெற்றோர்கள் செய்த மிககேவலமான செயல்

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு பெற்றோர்கள் செய்த மிககேவலமான செயல்

மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்புா் மாவட்டத்தின் ஹா்தஸ்புல் கிராமத்தைச் சோ்ந்த 19 வயது பெண் அதே கிராமத்தைச் சோ்ந்த 21 வயது இளைஞரைக் காதலித்துக் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டாா். அவா்களது திருமணத்திற்கு பெற்றோா் எதிா்ப்புத் தொிவித்து வந்தனர். எனினும், அதனைப் பொருட்படுத்தாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து நடைபெற்ற கிராம பஞ்சாயத்தில் இளைஞரின் குடும்பத்தினா் மணப்பெண்ணின் குடும்பத்திற்கு 70 ஆயிரம் ரொக்கம் கொடுக்க வேண்டுமெனத் தொிவித்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து இளம் ஜோடி வேலை தேடி குஜராத்திற்கு சென்றுள்ளது. பின்னா், கடந்த வாரம் இருவரும் ஹா்தஸ்புல் கிராமத்திற்கு வருகை தந்து மணமகனின் உறவினா் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இதனை அறிந்த மணமகளின் தந்தை மற்றும் உறவினா்கள் சிலா் அதிகாலை- 4 மணியளவில் அந்த வீட்டிற்கு வந்து இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனா். பெண்ணின் தலை முடியை வெட்டியுள்ளனா்.

பின்னர் தமது ஆத்திரம் தீராத நிலையில் இருவரையும் சிறுநீா் குடிக்க வைத்துச் சித்திரவதை செய்துள்ளனா். இதனைத் தொடா்ந்து காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாாின் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தந்தை, உறவினா்கள் என ஆறு போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடாத்தி வருகின்றனா்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com