காதல் காட்சிகள் வேண்டாம்… கண்டிஷன் போட்டுவிட்ட தல!

காதல் காட்சிகள் வேண்டாம்… கண்டிஷன் போட்டுவிட்ட தல!

தல நடிகரின் முதல்  இரண்டு படங்களை இயக்கியவர்தான் இப்போது மூன்றாவது முறையாக நடிகரை இயக்கி வருகிறார். முதல்  இரண்டு படங்களும் தல ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால் இந்த வாய்ப்பு அவருக்குப் போயிருக்கிறது.

ஆனால் அந்த இரண்டு படங்களிலுமே ஹீரோவின் ரொமன்டிக்  போர்ஷன் எடுபடவே இல்லை.  இனிமேல் தான் காதலித்தாலோ டூயட் பாடினாலோ அது செட் ஆகாது என்பதை உணர்ந்து விட்டாராம் நடிகர்.

எனவே இந்த படத்தில் அந்த மாதிரியான எந்த விஷயங்களும் இருக்க கூடாது என்று இயக்குநரிடம் கண்டிஷன் போட்டு விட்டாராம். நடிகரின் வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்ட இயக்குநரும் ஹீரோயினுக்கான போர்ஷனை வெகுவாகக் குறைத்து விட்டாராம்.