காதல் கணவனின் நடத்தையில் சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்!!

காதல் கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து கம்பியால் தாக்கிய கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் சர்ஜின் என்பவரும் ஓட்டுநரான இவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த பிபிதா என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் சர்ஜினுக்கு பல பெண்களுடன் முறையற்று உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சர்ஜினுக்கும், பிபிதாவுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சர்ஜின் பிபிதாவைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிபிதா, இன்று காலை வீட்டில் சர்ஜின் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தலையில் இரும்புக் கம்பியால் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சர்ஜின் சத்தம்போட முயலவே கத்தியால் அவரது கழுத்தை பிபிதாஅறுத்துள்ளார். இரத்த வெள்ளத்தில் சர்ஜின் கூச்சலிட்டதால் அச்சமடைந்த பிபிதா கதவுகளை பூட்டிவிட்டு தப்பினார்.

உடைகளில் ரத்தக்கரையுடன் பிபிதா தப்பிச் சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள்,சந்தேகத்தில் அவரை பிடித்து வைத்தனர்.பின் அவரது வீட்டிற்கு சென்ற பார்த்த பொது உயிருக்கு போராடிய

சர்ஜினை மீட்டு கேரள மாநிலம் பாறசாலையில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பபிதாவை கைது செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]