காதல் உறவை முறித்துக் கொண்ட காதலனுக்கு காதலி புகட்டிய பாடம்- அதிர்ச்சி வீடியோ உள்ளே

காதலித்து பின்பு காதல் உறவை முறித்துக் கொண்ட காதலனின் நாக்கை காதலி கடித்து, காதலனை நகரவிடாமல் செய்துள்ள சம்பவம் கிழக்கு சீனாவில் அன்­ஹுயி மாகா­ணத்­தி­லுள்ள கியன்ஷான் நகரில் அரங்கேறியுள்ளது.

காதலனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக இவ்வாறு அவர் செய்துள்ளார்.

ஸொயு என்ற 26 வயது பெண் தனது காத­ல­ரான லியு என்ற 23 வயதுடைய இளைஞனின் நாக்கை விடாது இறுகக் கடித்து அவரை வலியால் துடிக்க வைத்­துள்ளார்.

இருவரும் பல வருடமாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் காதலன் தனது காதல் உறவை முறித்துக் கொண்டுள்ளார்.

சம்­பவ தினம் காதலனை வீதியில் குறித்த பெண் கண்டுள்ளார். அப்போது காதலனை வழிமறித்து இறுதியாக முத்­த­மொன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்­பு­வ­தாக கூறியுள்ளார்.

அதற்கு காதலன் இணக்கம் தெரிவித்துள்ளார். உடனே காதலி அவரை முத்­த­மி­டு­வது போன்று பாவனை செய்து திடீ­ரென அவ­ரது நாக்கை இறுகக் கடித்­துள்ளார்.

வலிதாங்க முடியாது காதலன் கூச்சலிட்டு கத்தியுள்ளார். அப்போது அவ்வழியே சென்றவர்கள் இந்த சம்பவத்தைப் பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்­திற்கு வந்த பொலிசார் குறித்த பெண்ணின் மீது மிளகுத் தூள் பிரயோகித்து பெரும் போராட்­டத்தின் மத்­தியில் அவ­ரி­ட­மி­ருந்து காத­லனை மீட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]