காதலை ஏற்க மறுத்த மாணவி- கழுத்தை அறுத்த ஆசிரியர் – வீடியோ உள்ளே

இந்தியா ஆந்திரப் பிரதேசத்தில் தனது காதலை ஏற்க மறுத்த காரணத்தினால் ஆசிரியர் ஒருவர் மாணவியின் கழுத்தை அறுக்க முயன்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

குர்நூல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவியை அதே பாடசாலையில் இந்தி கற்பிக்கும் ஆசிரியர் சங்கர் ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மாணவி ஆசிரியரின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஆசிரியர் சங்கர் இன்று காலை, மது போதையில் மாணவியின் வீட்டிற்கு சென்று தனிமையில் இருந்த மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் மாணவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆசிரியரை பிடித்து அடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

https://platform.twitter.com/widgets.js

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]