காதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை!

தமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களும் காதலுக்காக சிரமப்பட்டவர்கள் தான்.

தேவயானி கதாநாயகியாக நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் மற்றும் சூரிய வம்சம் படங்களை இயக்கியவர் ராஜ்குமார். இதன் போது தான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

தேவயானியின் தந்தை மும்பையை சேர்ந்தவர். அம்மா ஒரு மலையாளி. தேவயானியின் காதல் விவகாரம் இவரது வீட்டிற்கு தெரிவித்ததையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடைசி வரை இவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவரை வீட்டுக்குள் சிறை வைத்துள்ளனர்.

ஆனால், ராஜ்குமாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தேவயானி, ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

தேவயானி ராஜ்குமாரை திருமணம் செய்துகொண்டது அவர்களது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

திருமணம் முடிந்த பின்னர் கூட இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தேவயானிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்னர்தான் குடும்பத்தினர் இவர்களோடு பேச ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]