காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா? அப்போ கண்டிப்பா இதை பாருங்க

பொதுவாகவே ஒவ்வொரு உறுப்புகளும் நம்மை பற்றி ஆழமாக உணர்த்தும் தன்மை கொண்டவை. இவற்றில் ஒரு சில உறுப்புகளை வைத்தே நாம் எப்படிப்பட்டவர் என்பதை தெளிவாக கூறி விட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். உங்கள் காதை வைத்து கூட உங்களை பற்றி மிக எளிமையாக சொல்லி விட முடியுமாம்.

காதை வைத்து கூட இப்படியெல்லாம் கண்டுபிடிக்க முடியுமா..? என்கிற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், இதற்கு விடை “முடியும்” என்பதே. வாங்க, இது எப்படி சாத்தியம் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

ஒலி..! இந்த உலகின் அழகிய ஒலியை ரசிப்பதற்காகவே நமக்கு இந்த காதுகள் உள்ளன. இசை பிரியர்களுக்கு காது இல்லையென்றால், அவ்வளவுதான்..! “மொழி” படத்தில் இந்த உறுப்பின் முக்கியத்துவத்தை மிக அழகாக காட்டி இருப்பார்கள். இதை விட ஒரு சுவாரசியமான ஒன்று என்னவென்றால், உங்கள் காது உங்களை பற்றி சொல்வதே…

காதுவும் மரபணுவும்..! நம்மில் பலருக்கு நம் அப்பாவை போன்றோ, அம்மாவை போன்றோ அல்லது தாத்தாவை போன்றோ காதுகள் இருக்கும். இத்தனை நாளாக நாம் இதை கவனிக்காமல் கூட இருந்திருப்போம்.

பரம்பரை ரீதியாக இந்த மரபணு இப்படியே கடத்தி வந்தால் இது போன்று ஒரே மாதிரியான காதுகள் நமக்கும் இருக்கும்.

பரந்த காதுகள் இது போன்று உங்களின் காதும் பரந்து காணப்பட்டால், நீங்கள் மிகவும் சாதுவான குணாதிசயம் கொண்டவராக இருப்பீர்கள்.

பொதுவாக இவர்கள் எதையும் பரபரப்புடன் எடுத்து கொள்ளாமல், நிதானமாக செயல்படுவார்கள். கிட்டத்தட்ட ஒரு ஜாலியான கேரக்டர் என்றே சொல்லலாம். மேலும், இவர்களுக்கு நக்கலும் நய்யாண்டத்தனமும் அதிகமாகவே இருக்குமாம்.

மங்கிய நிற காதுகள் இதனை அறிவியல் ரீதியாக சொல்ல போனால், ஊட்டசத்து குறைபாடு கொண்ட காதுகளாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு குறிப்பாக கால்சியம் மற்றும் வைட்டமின் உடலில் குறைவாக உள்ளது என்பதை இந்த காதுகள் உணர்த்துகிறது. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறுபடலாம்.

குறுகிய காதுகள் இவர்கள் எதையும் பிறரிடம் வெளியில் சொல்லாமல் தனக்குள்ளே மறைத்து வைத்து கொள்வர். மேலும், பெரும்பாலும் அமைதியை அதிகம் விரும்புவார்கள் இவர்கள். வதந்தி பரப்புதல், புரளி பேசுதல் இவர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காதாம்.

செக்க சிவந்த காதுகள் ஒரு சிலருக்கு காதுகள் பார்ப்பதற்கு மிகவும் சிவந்த நிறத்தில் இருக்கும்.

இது போன்று இருந்தால் மூளை பாதிப்பு உள்ளது என அர்த்தமாம். இவர்களுக்கு அடிக்கடி ஞாபக மறதி, நீண்ட நாட்கள் தலைவலி போன்றவை இருக்க கூடும். மேலும், இது சிறுநீரக பிரச்சினையாக கூட இருக்கலாம்.

வட்டமான காது காதின் வடிவம் வட்டமாக இருந்தால் நீங்கள் அதிக நேர்மையாக இருப்பீர்கள் என்று அர்த்தமாம்.

மேலும், உங்களிடம் விசுவாசமாக இருப்போரிடம் நீங்களும் விசுவாசமாக இருப்பீர்கள். எப்போதும் பிறருக்கு உதவும் மனப்பான்மை தான் உங்களிடம் இருக்கும் முக்கிய குணமாம்.

சுருக்கமான காதுகளா..? உங்களின் காதுகள் ஒரு விதமாக சுருக்கத்துடன் இருக்கிறதா..? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்க கூடும்.

ஆமாங்க, இந்த காதுகள் உங்களுக்கு இதய கோளாறுகள் வருவதை முன்கூட்டியே சொல்கிறது என அர்த்தமாம். எனவே, ஜாக்கிரதை நண்பர்களே..!

சதுர காதுகள் பெரும்பாலும் இந்த சதுர காதுகள் மிக சிலருக்கே இருக்குமாம். எனினும் இவர்கள், அதிக புத்திசாலியாகவும், பலவித திறமைகளை கொண்டவராகவும் இருப்பார்களாம்.

மற்றவர்களை போன்று எல்லாத்தையும் ஒரே மாதிரியாக செய்யாமல், இவர்களின் உலகை இவர்களே உருவாக்கி கொள்வார்கள்.

200 புள்ளிகளா..? உங்களுக்கு தெரியுமா, காதுகளில் 200 அக்குபஞ்ச்சர் புள்ளிகள் உள்ளதாம். இதனை கொண்ட மிக மோசமான நோய்களை கூட நம்மால் எளிதில் குணப்படுத்த முடியுமாம். இவை உளவியல் ரீதியான மற்றும் உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை தருகிறதாம்.

இது தெரியுமா..? நமது காதின் வடிவமானது நாம் குழந்தையாக கருவில் இருந்த போது, உள்ள நிலையில் இருக்கிறதாம்.

அத்துடன் பல வித உணர்ச்சி பூர்வமான நரம்புகளும் இதில் உள்ளதாம். மேலும், காதுகளின் வடிவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்குமாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]