காதலியை பிளேடால் சரமாரியாக தாக்கிய காதலன் – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

காதலன் தனது காதலியை பிளேடால் சரமாரியாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது.

சென்னையில் பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்த சத்யபிரகாஷ் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவரும் சென்னையில் விடுதி ஒன்றில் தங்கி பணி புரிந்து வரும் திருச்சியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் காதலி பிற ஆண் நண்பர்களுடன் பழக, அதில் சந்தேமடைந்த சத்யபிரகாஷ் அவரை பலமுறை கண்டித்துள்ளார்.

அதை காதலி கேட்காததால், இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் உன்னுடன் பேச வேண்டும், பல்லாவரம் கண்டோன்மண்ட் பூங்கா அருகில் வா என்று சத்யபிரகாஷ் கூற, அதன்படி காதலியும் அங்கு சென்றுள்ளார்.

அங்கு இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் போதே வாக்குவாதம் அதிகமானது. அதில் ஆத்திரமடைந்த சத்யபிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் காதலியின் தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து, பொலிஸில் தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சத்யபிரகாஷை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]