காதலியை கடத்த கப்பம் கோரிய காதலன்

15 வயது சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தபபோவதாக கூறி கப்பம் கோரிய இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள சிறுமியின் தந்தையான வியாபாரியிடம் குறித்த இளைஞன் கப்பம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 1 மில்லியன் ரூபாய் பணத்தை குறித்த இளைஞன் கப்பமாக கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், 25 வயதுடைய குறித்த இளைஞன் சிறுமியின் காதலன் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]