காதலியின் தலையில் கல்லை போட்டு கொலைசெய்த காதலன் – காரணம் உள்ளே!!

ரஷ்யாவில் காதலியின் தலையில் கல்லை போட்டு காதலன்கொலை செய்திருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Dagestan பகுதியில் உள்ள சாலையில் காரில் வந்த நபர் ஒருவர் பெண் ஒருவரை சாலையில் இழுத்து போட்டு, அவர் தலையில் கல்லை போட்டுகொடூரமாக கொலை செய்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதால், அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், Zhanora Akhyadova(31) என்ற பெண் அங்கிருக்கும்காபி ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார். இவரும் ஆனர் என்ற நபரும் சமீபகாலமாககாதலித்து வந்துள்ளனர்.
Zhanora Akhyadova காபி ஷாப்பில் வேலை செய்யும் போது, அங்கு வரும் ஆண் வாடிக்கையாளர்களிடம் பேசுவார். இதைக் கண்ட ஆனருக்கு பிடிக்கவில்லை.

இதன் காரணமாக இருவருக்கும் அவ்வப்போது சண்டை வரும் .
இதன் காரணமாக ஆத்திரத்தில் இருந்த ஆனர் அவரை நடுரோட்டில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் பொலிசார் நடத்திய விசாரணையில், Zhanora Akhyadova வீட்டில் யாரோ ஒரு பையனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்

அப்போது வீட்டிற்கு வந்த ஆனர் இதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார் .
அதன் பின் ஒரு வாடகை காரில் இருவரும் சென்ற போது வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் கார் டிரைவர் இருவரையும் நடு ரோட்டில் இறக்கவிட்டுச் சென்றுள்ளார். கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆனர் காதலியின் கை மற்றும்கால்களை கட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின் அங்கிருக்கும் கல் ஒன்றை எடுத்து வந்து அவர் மீது6 முறை போட்டுள்ளான். இதனால் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதை ஆனர் பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளதுடன், அந்த நேரத்தில் கோபத்தின் காரணமாக இது போன்று செய்துவிட்டதாக கூறியுள்ளான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]