காதலித்த குற்றத்துக்காக பெற்ற மகளுக்கு தீ வைப்பு!!

காதலித்த குற்றத்துக்காக கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூருவில் 20 வயதுப் பெண் ஒருவர் பெற்றோராலேயே தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் 20 வயது மகளுக்கு பெற்றோர் ஜூஸில் விசம் கலந்து கொடுத்துக் கொன்றனர். பின்னர் விவசாய நிலத்தில் அந்தப் பெண்ணின் உடலை தீ வைத்து எரித்துள்ளனர்.

வேறு சாதி இளைஞனை காதலித்த குற்றத்துக்காக பெண்ணுக்குத் தீ வைத்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.