காதலித்த குற்றத்திற்காக இளம்பெண்ணை கட்டிவைத்து உதைத்து கொடுமைபடுத்திய ஊர்மக்கள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே

இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து ஊர் மக்கள் அனைவரும் அடித்து உதைத்த சம்பவம் பீகாரில் இடம்பெற்றுள்ளது.

நவடா மாவட்டம் ராஜவுளி என்கிற கிராமத்தில் வசித்து வந்த ஒரு இளம்பெண் பக்கத்து கிராமத்தில் உள்ள வேறு சாதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்துள்ளார்.

இந்த விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரியவந்தமையைத் தொடர்ந்து அவரை வீட்டு சிறையினுள் வைத்ததாக தெரிகிறது.

ஆனால், அந்த இளைஞரை மறக்க முடியாத அப்பெண், கடந்த 30ம் தேதி கிராமத்தில் மின்சாரம் இல்லாத சமயத்தில் வீட்டை விட்டு ஓடி அந்த இளைஞருடன் திருமணமும் செய்து கொண்டார்.

அவரை தேடி அலைந்த பெற்றோர் இருவரையும் பிடித்துவிட்டனர்.

பின்பு குறித்த பெண்ணை கிராமத்திற்கு இழுத்து வர அதற்குள் ஊர் பெரியவர் சேர்ந்து பஞ்சாயத்தைக் கூட்டி பஞ்சாயத்தில் அப்பெண்ணை கட்டி வைத்து அடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

அதன் படி, அப்பெண்ணை கட்டி வைத்து ஊர் மக்கள் அனைவரும் அடித்துள்ளனர்.

இதில் கொடுமை என்னவெனில் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அவரின் பெற்றோரும் இதை வேடிக்கைப் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை எடுத்து ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட இந்த சம்பவம் நாடெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]