காதலித்தது குற்றமா? காதலனை தீயிட்டு கொளுத்திய விபரிதம்!

காதலித்தது குற்றமா? காதலனை தீயிட்டு கொளுத்திய விபரிதம்!

இந்தியா உத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலித்ததால் இளைஞர் ஒருவருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடா நகரைச் சேர்ந்தவர் நரேந்திர சக்யா. இவர் ராஷ்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராஷ்மியின் பெற்றோர் நரேந்திராவை திருமணம் குறித்து பேச வீட்டுக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.

நரேந்திரா ராஷ்மியின் வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த மூன்று உறவினர்கள் நரேந்திராவை பிடித்து படுக்கையுடன் கட்டி தீ வைத்துள்ளனர். நரேந்திரா 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  மேலும் தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]