காதலிக்க மறுப்பு தெரிவித்த சிறுவன் மீது சிறுமி அசீட் வீச்சு!!

சிறுவன் ஒருவர் மீது சிறுமி, அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் பங்களாதேஸ் – டாக்கா நகரில் இடம்பெற்றுள்ளது. 16 வயதுடைய சிறுமி மேற்கொண்ட குறித்த அசிட் தாக்குதலில், 17 வயதுடைய சிறுவன் ஒருவரே உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட நாட்ககள் குறித்த சிறுவனிடம், சிறுமி தனது காதலை வெளிப்படுத்தி வந்துள்ள நிலையில், சிறுவன் அதனை ஏற்க மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் குறித்த சிறுவன் சென்று கொண்டிருந்த போது அசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில் இளைஞரின் முகத்தில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும். சம்பவம் தொடர்பில் அந்த நாட்டு காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]