காதலிக்க நேரம் இல்லை: சாய் தன்ஷிகா

ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சாய் தன்ஷிகா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘உரு’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்வு செய்துவரும் தன்ஷிகா கூறும்போது,

 

‘உரு’ கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு நடந்த இடம் கொடைக்கானல். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு அதனால் அங்கு குளிர் எங்களை பாடாய் படுத்தியது. மன உறுதியுடன் ஒட்டுமொத்த குழுவினரும் பணியாற்றினோம்.

Sai Dhanshika Actress

சண்டைக்காட்சிகளில் இயக்குனர் விருப்பப்படி நானே நடித்தேன். இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போனது.

அடுத்து.. ‘காலக்கூத்து’ என்ற படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். நாகராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கிறார். இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கும் ‘விழித்திரு’ படத்தில் வடசென்னை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணாக காமெடி கலந்து நடித்திருக்கிறேன்.

ஆக்‌ஷன் ஹீரோயினியாக திட்டமிட்டு நடிக்கவில்லை. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கேரக்டரைத்தான் தேர்ந்தெடுக்கிறேன். ‘டேவிட்’ படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் ‘சோலோ’ படத்தில் ஒரு கண்பார்வையற்ற நடன கலைஞராக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு ஜோடி துல்கர் சல்மான். முழுமையாக ஆக்‌ஷன் படம் வந்தால் அதிலும் நடிக்க தயாராகவேயிருக்கிறேன்.

எனக்கு சினிமாவிலும், வெளியிலும் காதல் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதற்கெல்லாம் நேரமில்லை. தமிழ் தவிர, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறேன்” என்றார்.

காதலிக்க நேரம்

தமிழைத் தவிர.. தெலுங்கில் ‘வாலுஜடா..’ என்ற படத்திலும், கன்னடத்தில் சுனில் குமார் தேசாய் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் ‘உத்கர்ஷா’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறேன். எந்த மொழியில் நடித்தாலும் கதை தான் முக்கியம். கதை நன்றாக இருந்தால் மொழி கடந்தும் நடிப்பேன்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]