காதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்

காதலனுக்கு அனுப்பிய தனது நிர்வாண படம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் அதிர்ச்சி அடைந்தார் பல் மருத்துவ மாணவி. அவரை இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவதாக கூறி காதலித்து மணந்த வேறொருவர் தற்போது பாலியல் தொல்லை கொடுப்பதால் மாண வியின் நிலை மேலும் சிக்கலாகி உள்ளது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நிர்வாண படம்

பெங்களூருவில் வசித்து வருபவர் 23 வயது இளம்பெண். பல் மருத்துவ மாணவியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு தன் ஆண் நண்பர் ஒருவரை தீவிரமாக காதலித்தார். இருவரும் வாட்ஸ்-அப்பில் அரட்டை அடித்து வந்தனர். அப்போது, நிர்வாண படத்தை அனுப்பும்படி மாணவியிடம் காதலன் கேட்டுக்கொண்டார். காதலன் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையால் மாணவி தனது நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினார்.

இதை பதிவிறக்கம் செய்து கொண்ட காதலன், அந்த படத்தை தனது இன்னொரு நண்பருக்கு அனுப்பினார். அதை பதிவிறக்கம் செய்த அந்தநபர் தனது ஆசைக்கு இணங்கும்படி மாணவியை வலியுறுத்தியுள்ளார். இல்லை என்றால் நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். மேலும், அவருடைய செல்போன் எண்ணை பெற்ற அந்தநபர் ஆபாசமாக பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்-அப் குழுவில் பகிர்வு

மாணவி அதற்கு மறுக்கவே ஆத்திரமடைந்த அந்தநபர், மாணவியின் நிர்வாண படத்தை தனது நண்பர்கள் இருக்கும் வாட்ஸ்-அப் குழுவுக்கு பகிர்ந்தார். அதை அவருடைய நண்பர்கள் பலரும் பதிவிறக்கம் செய்து ரசித்துள்ளனர். அவர்களும் மாணவிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்த வேளையில், அந்த வாட்ஸ்-அப் குழுவில் இருந்த 30 வயது நிரம்பிய தொழில்அதிபர் ஒருவரும் மாணவியின் நிர்வாண படத்தை பார்த்து உள்ளார். அவர் அந்த மாணவியிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவர் ‘குழுவில் உறுப்பினராக உள்ளவர்களிடம் இருக்கும் நிர்வாண படத்தை அழிக்க நான் உதவி செய்கிறேன் என்று கூறி உள்ளார். அதனை தொடர்ந்து மாணவியும் அந்த தொழில் அதிபரும் தொடர்ந்து இணக்கமாக பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நான் உன்னை காதலிக்கிறேன்‘ என்று மாணவியிடம் தொழில் அதிபர் காதலை வெளிப்படுத்தினார். இந்த காதலை மாணவியும் ஏற்றுக்கொண்டார். இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

காதல் திருமணம்

ஆனால் இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அந்த மாணவி வீட்டைவிட்டு வெளியேறி தொழில்அதிபரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். திருமணத்துக்கு பின்னரும் மாணவி தனது படிப்பை தொடர்ந்தார். இந்த நிலையில், மாணவிக்கு மீண்டும் பிரச்சினை தொடங்கியது. கடந்த சில மாதங்களாக மாணவியை அவருடைய கணவர் மனதளவிலும், உடல்ரீதியாகவும் தொல்லை கொடுக்க தொடங்கி உள்ளார்.

குளிர்காலத்தில் அதிகாலையில் குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும்படி மாணவியை அவர் கூறியுள்ளார். தாம்பத்தியத்தின் போதும் அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், மனதளவிலும் அவரை துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் தன்னிடம் உள்ள அந்த நிர்வாண படத்தை இணையதளங்களில் வெளியிடுவதாகவும் மாணவியை அவர் மிரட்டியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவி சமீபத்தில் தனது கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று தங்கினார்.

விவாகரத்து கேட்கிறார்

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க மாணவியும், அவருடைய பெற்றோரும் விரும்பவில்லை. இருப்பினும், தங்களது மகளின் கணவருக்கு அறிவுரை கூறி அவரை மகளுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் “வனிதா சகாயவாணி” ஆலோசனை மையத்தில் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் மாணவி மற்றும் அவருடைய கணவரை அழைத்து ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கினர்.

பல்வேறு கட்டங்களாக நடந்த ஆலோசனையின்போது, முதலில் கணவருடன் செல்ல விரும்பிய மாணவி, பின்னர் தனது கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். மேலும், விவாகரத்து பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் ஆலோசகரர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆலோசனையின்போது மாணவியின் கணவர் கூறுகையில், எனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இல்லையெனில் கழுத்தை அறுத்துக்கொண்டோ அல்லது கமிஷனர் அலுவலகத்தின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்தோ தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி மிரட்டியுள்ளார். அத்துடன் ஆலோசனை மையத்திலேயே வைத்து ஒருமுறை விஷம் குடித்தும் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது. இதனால் இந்த பிரச்சினை இடியாப்ப சிக்கலாக மாறி ஆலோசனை மையத்தில் உள்ளவர்களையே கலங்க வைத்து உள்ளது. இருந்தபோதிலும் இந்த தம்பதிக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]