‘காதலர் தினம்’பட நடிகை புற்றுநோயால் பார்வை இழந்தாரா?

‘காதலர் தினம்’படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே.

சில தினங்களுக்கு முன் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் தளத்தில் இவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது நியூயார்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாளி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறார் என்று ரெிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் கீமோ சிகிச்சைக்காக மொட்டை அடித்தார். அப்போது அவர் கண்ணீர்விட்டபடி உருக்கமாக பேசியிருந்தார்.

சிகிச்சைக்குப் பின் விக் அணிந்துக்கொண்டு, புதிய தோற்றத்தில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது கீமோதெரபி காரணமாக கண்கள் பாதிக்கப்பட்டது. எனது கண்கள் வினோதமான செயல்களை செய்தன. என்னால் சிறிது நேரம் படிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் பீதி அடைந்தேன். இப்போது சரியாகிவிட்டது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]