முகப்பு Gallery காதலர் குடும்பத்தினருடன் ஜாலியாக ஊர்சுற்றும் பிரியங்கா – புகைப்படங்கள் உள்ளே

காதலர் குடும்பத்தினருடன் ஜாலியாக ஊர்சுற்றும் பிரியங்கா – புகைப்படங்கள் உள்ளே

பாலிவுட், ஹாலிவுட் மீடியாக்களில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதத்தில் கடந்த சில நாட்களாக இருவரும் ஜோடியாக பல இடங்களில் உலாவி வருகின்றனர்.

அத்துடன் தங்களது சமூக வலைத்தளப்பக்த்திலும் இவர்களின் கொஞ்சும் உரையாடல்கள், இருவருக்குமான உறவை உறுதிபடுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்கா சுதந்திர நாளான ஜுலை 4ம் தேதி நியூயார்க் நகருக்கு நிக் ஜோனாஸுடன் சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கிருந்து பிரேசிலுக்கு சென்று நிக் குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நிக் சகோதரி, சகோதரன் உள்ளிட்டோருடன் பிரியங்கா ஜாலி சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் நிக் கையை கோர்த்தபடியே நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

சமீபத்தில் இந்தியாவுக்கு விடுமுறைக்காக ஜோடியாக வந்திருந்த நிக் – பிரியங்கா ஆகியோர் பல இடங்களில் ஒன்றாகவே சுற்றித்திரிந்தனர்.

பிரியங்காவின் அம்மாவைச் சந்தித்த நிக், பின்னர் அவரது சகோதரி உள்ளிட்டோருடன் கோவாவில் விடுமுறையைக் கொண்டாடினார்.

முன்னதாக விருது நிகழ்ச்சி ஒன்றின் சிகப்பு கம்பள வரவேற்பில் நிக் ஜோனஸ் – பிரியங்கா ஆகியோர் ஒன்றாக கைகோர்த்து நடந்தனர். அப்போது முதல் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்தே இவர்கள் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகக் கிசுகிசுக்கப்படுகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com