காதலர்கள் உங்களை ஏமாற்றப்போகிறார் என்பதற்கான அறிகுறிகள் இவைகள்தான் – இனி கொஞ்சம் உஷாரா இருங்க பாஸ்!!

என்னதான் காதலன் ஏகபத்தினி விரதனாக இருந்தாலும் சில சமயங்களில் தனது காதலிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மற்ற பெண்களிடன் கடலை போடுவது உண்டு.

காதலி தன்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டு மற்ற பெண்களின் வாழ்க்கையில் வாழ்க்கையில் விளையாடும் ஆண்களை கண்டுபிடிப்பது சற்று சிரமமான காரியம் தான்.

ஆனால் அதையும் மீறி, உங்களுடைய காதலர் உங்களை ஏமாற்றுகிறாரா என்பதை அறிந்து கொள்ள சில அறிகுறிகள் இருக்கு. அது என்னனு பார்க்கலாம்.

காதலர்கள் இருவரும் எங்காவது போக திட்டமிட்டு இருந்து, வருகிறேன் என்று இருந்த காதலன் கடைசி நிமிடத்தில் ”எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது.

நீ வேண்டுமானால் உன் தங்கையோடு அல்லது தோழியோடு போய்ட்டு வா” என கூறினால் கொஞ்சம் கவனம்.

ஏனென்றால் மற்றைய காதலியோடு வெளியே போக வேண்டி இருக்கலாம்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு போகலாம் என கூறியவுடன் வேண்டாம் அங்கு சரியில்லை.

வேறு இடத்துக்கு போவோம் என கூறினால் சில நேரம் அவரது காதலி அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்

அவரது சொந்தங்களான அவரின் தாய், சகோதரி போன்றவரோடு நீங்கள் பழகுவதை அவர் விரும்பாவிடினும் கொஞ்சம் கவனம்.

உங்கள் காதலன் உங்களோடு நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கையில் கவனம் வேறு பக்கம் திரும்பினாலும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்க.

ஏனென்றால் இரண்டு பேரை காதலித்தால் கட்டாயம் அவர் இதை விட நல்லதா யாராவது கிடைக்க மாட்டாங்களா என தேடி கொண்டிருக்கலாம். அல்லது மற்றைய காதலி வந்திடுவாளோ என்கிற பயமும் காரணமா இருக்கலாம்

அவர் தொலைபேசி கணனி போன்றவற்ளை உங்களிடமிருந்து மறைத்து வைத்திருந்தால், மேலும் பாஸ்வேர்ட் போட்டு எல்லாவற்றையும் மூடி வைத்திருந்தால், அவரது பேஸ்புக் போன்ற சமூக வலைபின்னல்களை உங்களிடமிருந்து மறைத்தால் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

நீங்கள் இருக்கும் போது அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் ”அப்புறம் பேசுறேன்” என்று சொல்லிட்டு கட் பண்ணினால் ரொம்பவே கவனம்.

அவர் உங்களை செல்லப் பெயர் அல்லது பொதுப் பெயர் கொண்டு அழைத்தால் கொஞ்சம் கவனம். இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம்.

ஒன்று பொதுவான பெயர் கொண்டு அழைத்தால் தவறுதலாக மற்றைய காதலியின் பெயர் சொல்லிவிட தேவையில்லை.

இரண்டாவது நீஙகள் தொலைபேசியில் அழைத்தால் மற்றைய காதலி முன்னாலே உங்கள் பொது பெயரை கூறி அது வேறு யாராவது என கூறி மழுப்பலாம்.

உங்களுடன் இருக்கும் போது அந்த வழியாக செல்லும் அழகான பெண்கள் மீது உங்கள் காதலர் கவனம் செலுத்தினால் மிகவும் கவனமாக இருக்கவும்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]