காதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி

காதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி

ஆண்மையில்லாத காந்தி லலித்குமாரை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன் என்று சின்னதிரை நடிகை நிலானி தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட காந்தியும், நடிகை நிலானியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் படுக்கை அறையில் ஒன்றாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நடிகை நிலானி தன் மீதான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை தடுக்க கோரி பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘கணவர் என்னை விட்டு பிரிந்துசென்றுவிட்டதால், எனது பிள்ளைகளை வளர்க்க சிரமப்பட்டேன். சிறு சிறு வேடங்களில் நடிக்கும் பணத்தினை வைத்து எனது குடும்பத்தை பார்த்துக்கொண்டேன்.

இந்நிலையில் தான், தயாரிப்பாளர் என காந்தி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

நான் சினிமா படப்பிடிப்பில் இருக்கும் போது என் குழந்தைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து அழைத்து வருவார். இதனால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தோம். அப்போது நாங்கள் இருவரும் சேர்ந்து குறும்படம் ஒன்று எடுத்தோம். அந்த படத்தில் நான் காந்தியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை என் அனுமதி இல்லாமல் எனது பேஸ்புக் பக்கத்தில் நானே பதிவு செய்ததுபோல, காந்தி ஐ லவ் யூ மாமா என்று பதிவு செய்துள்ளார்.

இது நான் தான் பதிவு செய்ததாக நினைத்து அனைவரும் என்னிடம் கேட்டனர். இதன் மூலம் எங்களுக்குள் பிரச்சனை ஆரம்பித்தது.

என்னுடன் இருந்த போது காந்தி அவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை சொன்னார். ஒரு வழக்கில் ஆந்திரா பொலிசார் தன்னை பிடித்து ஆண் உறுப்பில் மின்சாரம் வைத்ததால்தான், உன்னை திருப்திப்படுத்த முடியவில்லை என்று கூறினார்.

ஆண்மை இல்லாதவரை நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும். அவன் நல்லவன் கிடையாது. குடிபழக்கத்துக்கு அடிமையானவர் என்று அவருடைய குடும்பத்தினரும் கூறினர். என் இரண்டு குழந்தைகளுக்காகத்தான் நான் யாரையும் திருமணம் செய்யவில்லை’ என கூறியுள்ளார்.

காதலன் காந்தி காதலன் காந்தி காதலன் காந்தி காதலன் காந்தி காதலன் காந்தி

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த போது, பொலிஸ் சீருடையில் தோன்றி, பொலிஸாருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

நிலானிக்கும், சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.

இந்நிலையில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்றிருந்த போது, அங்கு வந்த காந்தி லலித்குமார் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை அவதூறாகவும் பேசியுள்ளார்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் பொலிஸ் நிலையம் சென்று, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார்.

அதன்பேரில் மயிலாப்பூர் பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தகராறில் ஈடுபட்ட அவரது காதலன் காந்தி லலித்குமார், சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]